தமிழ் இன நலன்களை கூட்டமைப்பு அடகு வைக்கின்றது - சுகாஸ் தெரிவிப்பு
தமிழ் இன நலன்களுக்கு முரணாக செயற்பட்டு, தமிழர்களை அடக்கி வைக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் ஒரு அவசர அவசியமான ஊடக சந்திப்பில் பங்கேற்கிறேன் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய அரசியல் தரப்பு சூடுபிடித்து குழம்பிய நிலையில் காணப்படுகின்றது. ஏனென்றால் தமிழின நலன்களுக்கு முரணாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பாக தமிழரசுக் கட்சி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு எழுதிய கடிதத்தில் அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் செய்த குற்றங்களை விசாரிக்க வேண்டும் என கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உண்மையில் கடந்த காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செய்த நடவடிக்கைகளை மீண்டும் உறுதிப்படுத்துகின்ற, மீண்டும் காட்டிக் கொடுக்கின்ற ஒரு தொடர்ச்சியான செயற்பாட்டில் இவர்கள் ஈடுபட்டு வருவதை மீண்டும் ஒருமுறை படம் பிடித்துக் காட்டுகின்றது.
எந்தவொரு இடத்திலாவது தன்னுடைய இனத்திற்காக செயற்பட்டவர்களை விசாரிக்க வேண்டும் என்று கோரிய சம்பவம் நடந்து இருக்கிறதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்துகள் இல்லை