நீர்வேலியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!
நீர்வேலிப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி, நீர்வேலி சந்திக்கு அருகில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு முன்பாக நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தவேளை மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக வீதியோரமாக இருந்த சிமெந்து கட்டுடன் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.
இதன்போது சிமெந்து கட்டில் காணப்பட்ட இரும்பு கம்பி அவரது நெஞ்சுப் பகுதியில் குத்தியமையால் படுகாயமடைந்த இளைஞனை நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி பகுதியைச் சேர்ந்த டிலக்சன் (வயது 24) இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கருத்துகள் இல்லை