பசிலிடம் சுமந்திரன் நேரடியாக முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் நேரடியாக முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
வடக்கில் மேலதிக தகனசாலைகளை அமைக்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் தரும் நேரத்திற்குள் உடல்களை அப்புறப்படுத்துவதற்கு போதுமான தகனசாலை வசதிகள் வட மாகாணத்தில் இல்லையென எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மேலதிக தகனசாலைகளை அமைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை