நல்லூரானின் வருடார்ந்த தேர்த்திருவிழா மகோற்சவம் இன்று
வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்காரக்கந்தன் மஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று காலை சுகாதார நடைமுறைகளை கருத்தில்கொண்டு பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவரையில் அருள்பாலித்து விளங்கும் அலங்கார கந்தனுக்கும், வசந்த மண்டவத்தில் அருள்பாலித்து விளங்கும் நல்லையம்பதி முருகன், வள்ளி, தெய்வானை, ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேக, ஆராதனைகள் என்பன இடம்பெற்றன.
இதனை தொடர்ந்து தங்கரத்திருத்தேரில் முருகப்பெருமான் ஏறி உள்வீதியுடாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இத் திருவிழா ஆலயபிரதம குரு சிவஸ்ரீ சி.வைகுந்தன் குருக்கள் தலைமையிலான அந்தணர் சிவாச்சாரியர்களால் நடாத்திவைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை