வடிவேலுவின் பிரச்சனையை தீர்த்து வைத்தது யார் தெரியுமா? யாருடைய மகன் என்று தெரிந்தால் ஷொக் ஆகிடுவீங்க
தன் பிரச்சனையை எல்லாம் தீர்த்து வைத்தது ஜி.கே. மணியின் மகன் தான் என்று வடிவேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வடிவேலு நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். தான் நடிக்கும் நாய் சேகர் படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது.
பிறந்தநாளையொட்டி வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது,
இந்த பிறந்தநாளில் புதிதாக பிறந்தது போன்று இருக்கிறது. பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நாய் சேகர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது. நான் சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை.
என்னை நிறைய பேர் வாழ்த்தியதில் சந்தோஷம். நாய் சேகர் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த அளவுக்கு பிரச்சனையை முடித்தது ஐயா தமிழ்குமரன் தான். ஜி.கே. மணி ஐயாவின் மகன் தான் இவர். லைகா நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கிறார். இவ்வளவு பிரச்சனையையும் சரி செய்து கொடுத்திருக்கிறார்.
சுபாஷ் கரண் வாழ்த்தியது சந்தோஷமாக இருக்கிறது. உதயநிதி சார் போன் செய்தார். நிறைய பேர் போன் செய்தார்கள். நாய் சேகர் படத்தில் நான் பாடுகிறேன்.
என் படத்தில் சந்தோஷ் நாராயணன் இருந்தால் நல்லா இருக்கமே என்று தமிழ்குமரனிடம் கூறினேன். அவர் உடனே சந்தோஷ் நாராயணனுக்கு போன் செய்தார். போன் எடுத்த உடனே, எங்கே தலைவன் எங்கே இருக்கார்னு சொல்லுங்க, அவரிடம் போன் கொடுங்க. அவருக்கு மியூசிக் பண்றது தான் என் முதல் வேலை. தலைவா, தலைவானு பேசியதும் எனக்கு ஒன்னுமே புரியல. அவர் பேசியதில் அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பிசியான இசையமைப்பாளர் கேட்கிறார் என்றால் அது பெரிய விஷயம் என்றார்.
கருத்துகள் இல்லை