தாக்குதல் நடத்தி அடாவடியில் ஈடுபட்ட தேரர் பிரதமரின் ஆலோசகரா?
தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பல்லபெத்தே நந்த ரதன தேரர் பிரதமரின் ஆலோசகராக பதவி வகிக்கவில்லை என பிரதமரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
கெக்கிராவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பிசோதகர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பல்லபெத்தே நந்தரதன தேரர் பிரதமரின் ஆலோசகராக பதவி வகிப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.
நந்தரதனதேரர் தற்போது பிரதமரின் ஆலோசகராகவோ அல்லது பிரதமர் அலுவலகத்தில் வேறு எந்தவொரு பதவியையோ வகிக்கவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை