• Breaking News

    இவரை தெரியுமா? பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

     “பொப்மாலி” என அழைக்கப்படும் களுத்துறை சந்தித தாப்ருவே என்ற சந்தேகநபரை கைது செய்வதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

    குறித்த நபரின் புகைப்படங்களை வெளியிட்டு குறித்த நபரை கண்டாலோ, அவர் தொடர்பில் தகவல் தெரிந்தாலோ தமக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

    அதன்படி பொலிஸ் போதைப்பொருள் பணியக உதவிப் பணிப்பாளரின் 071-8592727 அல்லது 011-2343334 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 31ஆம் திகதியன்று, பேருவளை கடலில் வைத்து 288.644 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

    சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் குறித்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு பிரதான காரணகர்த்தவாக “பொப்மாலி” என்ற குறித்த நபரே இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    இதனையடுத்தே நீண்டகாலமாக மீன்பிடியில் ஈடுபட்டு வரும் 41 வயதான சந்தேகநபர் தொடர்பில் தகவல் கோரப்பட்டுள்ளது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad