• Breaking News

    பிரித்தானியா முதல் ஜெனிவா வரையிலான ஈருளிப்பயணம் பெல்சியத்தை வந்தடைந்தது

     தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனித நேய ஈருளிப்பயணம் 4ம் நாளாக 340Km தொலைவு கடந்து பெல்சியம் நாட்டிற்குள் பிரவேசித்முள்ளது.

    பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து 4ஆம் நாளாக நெதர்லாந்தில் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று (05) நெதர்லாந்து பிரேடா மாநகரசபை முன்றலில் இருந்து பெல்சியம் நோக்கி பயணித்திருந்தது.

    அந்த வகையில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் லண்டன் முதல் ஜெனிவா வரையிலான ஈருருளிப் பயணம் இன்று காலை 4 ஆவது நாளை நெதர்லாந்தின் பிறேடா நகரில் இருந்து ஆரம்பித்து பெல்ஜயம் நோக்கி பயணித்திருந்தது.

    இன்றைய நிகழ்வில் நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் ஜெயாவும் கலந்துகொண்டிருந்தார். 

    நெடுந்தூரப் பயணத்திற்கு பின்னர் நெதர்லாந்து மற்றும் பெல்சிய எல்லைகளில் இரு நாட்டு கிளைப் பொறுப்பாளர்களின் சம்பிரதாயபூர்வமாக வாழிட நாட்டு தேசியக்கொடி பரிமாறப்பட்டதும் ,உணர்வு மிக்க தமிழ் மக்களின் வரவேற்போடு எம் அறவழிப்போராட்டம் அன்வேர்ப்பன், பெல்சியம் மாநகரசபையில் வந்தடைந்து பெரும் எழுச்சியாக தமிழர்களுடைய தாரக மந்திரத்தோடு நிறைவு பெற்றுள்ளது.

    நாளை மீண்டும் பெல்சியத் தலை நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொள்ள இருக்கின்றது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad