• Breaking News

    பிறந்து ஒரு மாதமேயான குழந்தை உயிரிழப்பு! யாழ். பருத்தித்துறையில் சோகம்

     யாழ். பருத்தித்துறை யில் பிறந்து ஒரு மாதமேயான சிசு ஒன்று நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது.

    குறித்த குழந்தையின் தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், குழந்தை வீட்டில் உயிரிழந்ததனால் குழந்தையின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது.

    இந்த நிலையில் குழந்தையின் சடலம் மீதான பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    குழந்தையின் மரணம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டிருந்தார். இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad