வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
வவுனியா - பூந்தோட்டம் பகுதியில் கேரள கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பூந்தோட்டம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவ்வீதி வழியாக வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினை வழிமறித்து அதில் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது குறித்த முச்சக்கரவண்டியில் கேரள கஞ்சா கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதனை உடைமையில் வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸார் அவர் பயணித்த முச்சக்கரவண்டியினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை