• Breaking News

    மூன்றாவது தடுப்பூசிக்கு கிடைத்தது அனுமதி! யாருக்கெல்லாம் தெரியுமா?

     

    இலங்கையர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.

    இதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டோர், மற்றும் 30 - 60 வயதுக்கு உட்பட்ட சிறுநீரக கோளாறு, புற்று நோய் போன்ற பாரதூரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கும் மூன்றாவது தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் பைஸர் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad