• Breaking News

    கிருசாந்தியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

     யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 25ஆவது ஆண்டு நினைவு தினம்  இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

    தமிழ் தேசியக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களினால் வல்வெட்டித்துறையில் நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

    1996ம் செப்ரெம்பர் 7ஆம் திகதி யாழ். சுண்டுக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் அவரை சித்திரவதையின் பின் படுகொலை செய்ததாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad