யாழில் மோசடி வர்த்தகர்களை தேடி பாவனையாளர் அதிகாரசபை அதிரடி சோதனை!
யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அத்தியாவசியப் பொருட்களின் விலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பாவனையாளர் அதிகாரசபை வர்த்தக நிலையங்களில் ஆய்வு நடத்தியுள்ளது.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கொக்குவில், இணுவில், மருதனார்மடம், சுன்னாகம், பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை ஆகிய பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் இத் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
இந்த சோதனை நடவடிக்கையின் போது அரச வர்த்தமானி அறிவித்தலுக்கு மாறாக அதிக விலையில் பொருட்களை விற்ற வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை