எஞ்சின் திருடியவர் இளவாலை பொலிஸாரால் மடக்கிப் பிடிப்பு!
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குசுமாந்துறை கடற்கரையில் படகு ஒன்றின் எஞ்சினை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர் ஒருவர் நேற்றைய தினம் (2021.09.26) கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கைது செய்யப்பட்டவருக்கும் எஞ்சினை பறிகொடுத்தவருக்கும் இடையே சிலநாட்களுக்கு முன்னர் முரண்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் அவரது படகின் எஞ்சின் களவாடப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
அவரது முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை பொலிஸார் எஞ்சினுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை