மட்டு - கோறளைப்பற்றில் கிராமத்துக்கு ஒரு வீடு திட்டத்தில் தவிசாளரால் அடிக்கல் நாட்டப்பட்டது
ஜனாதிபதியின் "கிராமத்திற்கு ஓரு வீடு" என்ற திட்டத்திற்கு அமைவாக தமிழ் மக்கள்விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் சிபார்சுக்கு அமைவாக வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மட்டு - கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பேத்தாழை - நாசிவன்தீவு, கொண்டையங்கேணி, கிண்ணையடி, மருதநகர், கண்ணகிபுரம் ஆகிய ஆறு கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட வீட்டுப்பயனாளிகளுக்கு இன்று கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையிலான கட்சியின் கிராமிய மட்ட அங்கத்தவர்களால் அத்திபாரக்கல் வைக்கப்பட்டு வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை