காங்கேசன்துறையில் உயிரிழந்த நபர் தொடர்பாக வெளிவந்தது புதிய தகவல்
யாழ். காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் அருகில் இறந்து கிடந்தவரின் தலையில் மொட்டையான ஆயுதம் ஒன்றால் பலமாகத் தாக்கப்பட்டு உள்ளதாகவும் அதுவே மரணத்துக்கு காரணம் எனவும் யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் அறைக்கையிடப்பட்டிருக்கின்றது.
குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையில் உள்ள கட்டிட தொகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமரா காணொளி பதிவுகளில் பெரிய சுத்தியலுடன் அப்பகுதியில் பயணித்த சந்தேக நபரே கொலை செய்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் நேற்று முன்தினம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப் பட்ட நிலையில் அவரை 14 நாட்களுக்கு கட்டுக்காவலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கூரற்ற ஆயுதம் ஒன்றினால் தலையில் தாக்கப்பட்டது நாள் குறித்த நபர் உயிரிழந்தார் என்று யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியினால் ஆராயப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை