குற்றவாளி கூண்டில் நிற்பதற்கு பயந்து உளறும் சித்தார்த்தன் - சுகாஷ் தெரிவிப்பு!
யுத்தத்தின் இறுதிக்கணம்வரை அரச படைகளோடு ஒட்டுக்குழுவாகச் சேர்ந்து இயங்கி, தனது சொந்த மக்களையே கடத்தியும் கொலை செய்தும் கற்பழித்தும் காணாமலாக்கியும் ஈனச் செயல்கள் புரிந்து, வவுனியாவில் அரசியல் எதிர்காலம் இல்லாததால் யாழ்ப்பாணத்தில் அரசியல் செய்யும் இனப்படுகொலையாளி சித்தார்த்தனுக்கும் ப்ளொட் அமைப்பிற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்ற பெயரை உச்சரிக்கக்கூடத் தகுதியில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவரது வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைக்குச் சர்வதேச விசாரணை ஒன்று நடைபெறும்போது குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படவேண்டியவர்கள் வரிசையில் சித்தார்த்தன் அவர்களுக்கு நிச்சயம் முன்வரிசையில் இடமுண்டு. அந்தப் பயத்தில் அரச விசுவாசத்தில் சித்தார்த்தன் உளறிய உளறல்களை முற்றாக நிராகரிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை