யாழிலிருந்து மாடு கடத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட கடத்தல்காரர்கள் கைது!
யாழ். மாவட்டத்தில் இருந்து மாடுகளை கடத்திச் சென்ற கும்பலும் அக் கும்பலுக்கு ஆதரவு வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் சங்குப்பிட்டி பகுதியில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாடுகளுடன் வாகனமொன்று தென்னிலங்கை நோக்கி பயணிப்பது தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் வைத்து குறித்த வாகனம் படையினரால் சோதனையிட்டபோது மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் யாழ் மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை