வவுனியாவில் அமைந்துள்ள நெற்களஞ்சியசாலைக்கு சீல்
வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள நெற்களஞ்சியசாலைக்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உணவுப்பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள நெற்களஞ்சிய சாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் மூடைகள் தொடர்பான விபரங்களை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.
குறித்த கால எல்லைக்குள் அதனை வழங்காத நெற்களஞ்சிய சாலை ஒன்று வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்களால் இன்று(03) சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹொறவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலையம் ஒன்றிலிருந்த மாமூடைகளில் நியாய விலை காட்சிப்படுத்தப்படாமையினால் அந்த வியாபார நிலையம் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதுடன், குறித்த கோதுமைமா மூடைகளும் அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை