காவலாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி சர்ச்சையில் சிக்கிய மற்றுமொரு முக்கியஸ்தர்!
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள காணியொன்றின் காவலாளர்களை ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி – கொத்தலாவல அவன்யூவிலுள்ள காணியொன்றுக்கு இருவேறு தரப்பினர் காவலாளிகளை பணிக்கமர்த்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹம்பாந்தோட்டை மேயர் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (14) இரவு பம்பலப்பிட்டியில் உள்ள கொத்தலாவல அவன்யூவில் உள்ள காணிக்குள் புகுந்து இரண்டு தனியார் காவல் பணியாளர்களை தாக்கியதாக பம்பலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
SUV வாகனத்தில் சிலருடன் சென்ற மேயர், காவல் பணியாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
குறித்த காணி தொடர்பில் வழக்கு ஒன்று இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையிலேயே கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை