கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட பெருந்தொகை அபராதம்
மொபைல் ஒப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்பான வர்த்தகத்தில் போட்டியாளர்களை ஒடுக்கும் திட்டத்துடன், தனது சந்தை ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக, கூகுள் நிறுவனத்திற்கு 207.4 பில்லியன் வான் (177 மில்லியன் டொலர்) அபராதம் விதிப்பதாக தென் கொரியாவின் நிறுவனமொன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
தென் கொரியாவின் உள்ளூர் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் வேறு ஒப்பரேட்டிங் சிஸ்டங்களை பயன்படுத்தாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் கூகுள் ஈடுபட்டது என்ற இந்த குற்றச்சாட்டை அங்குள்ள நியாய வர்த்தக ஆணையம் விசாரித்தது.
அதன் முடிவில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதம் தென்கொரியாவில் கூகுளுக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை