யாழில் கசிப்புடன் மூவர் கைது!
ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலும் யாழில் சட்டவிரோத கசிப்பு விற்பனை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து யாழ். பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
இந்நிலையில் இன்று அதிகாலை 1மணியளவில் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் வைத்து 180 லீட்டர் கோடா மற்றும் 20லீட்டர் கசிப்புடன் நால்வர் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரும் எதிர்வரும் 27ம் திகதி யாழ் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
கருத்துகள் இல்லை