• Breaking News

    மட்டக்களப்பில் வாவியிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

     மட்டக்களப்பு வாவியின் குருமணிவெளி ஓடத்துறைப் பக்கமிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    குறித்த சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் குருமண்வெளி 12ஐச் சேர்ந்த குமாரையா கோபாலசாமி (68 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    நேற்று இரவு 11 மணி வரை தமது வீட்டிலிருந்த குறித்த முதியவர் அதன் பின் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று காலை வாவியில் சடலம் ஒன்று கிடப்பதாக அறிந்த உறவினர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

    ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸாரும், மட்டக்களப்பு தடயவியல் பொலிஸாரும் சடலத்தை பார்வையிட்டதுடன், குறித்த முதியவர் பாவித்ததாக கருதப்படும் ஊன்றுகோல் ஒன்றையும், டோச் லைட் ஒன்றையும் ஆற்றங்கரை ஓரத்திலிருந்து மீட்டுள்ளதுடன், விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

    இந்நிலையில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய சம்பவ இடத்திற்குச் சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் நிலைமையை பார்வையிட்டதை தொடர்ந்து அவரது முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டதையடுத்து சடலம் குறித்த முதியவருடையது தான் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

    சடலத்தைப் பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி அதனை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad