நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அலுவலகம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தகவல்
கிளிநொச்சியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகமான அறிவகம் இலங்கை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அலுவலகத்திற்கு வந்து செல்லும் அனைவரும் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளன.
அலுவலகத்திற்கு உள்ளே எவரையும் செல்ல விடாமல் தடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறித்த பொலிஸாரிடம் ஏன் இவ்விடத்தில் நிற்கிறீர்கள்? அலுவலகத்திற்கு வருவோருக்குத் தடையை ஏற்படுத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு "மேலிடத்து உத்தரவு என்று பதில் கூறி இருக்கிறார்கள்" எனவும் குறித்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை