அராலி - செட்டியார் மடத்தடியில் பெண் ஒருவரின் சங்கிலி திருட்டு!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி - செட்டியார்மடம் பகுதியில் வைத்து பெண் ஒருவரது ஒரு பவுண் சங்கிலி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண்ணும் அவரது உறவினரும் இன்று (2021.09.04) அராலி வீதியால் யாழ்ப்பாணத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களைக் கீழே தள்ளி விழுத்திவிட்டு சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை