• Breaking News

    பிரபல தொழிலதிபரை மகனே கொலை செய்த கொடூரம் அம்பலம்

     


    மறைந்த தொழிலதிபர் ஷாபிர் அப்பாஸ் குலாம்ஹுசைனின் இளைய மகன், அவரது தந்தையை 2017 ல் கொலை செய்ததாக தெரிவித்து பொலிசார் கைது செய்தனர்.


    உயர்மட்ட தொழிலதிபர் ஷாபிர் அப்பாஸ் குலாம்ஹுசைன் 2017 இல் கொழும்பில் உள்ள அவரது அலுவலக வளாகத்தில் இறந்து கிடந்தார். அவரது மரணம் இயற்கையான மரணம் என அறிவிக்கப்பட்ட பின்னர் இறுதி கிரியை நடத்தப்பட்டது.


    எனினும், 16 ஓகஸ்ட் 2018 அன்று இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்று காவல்துறைக்கு புகார் வந்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு, ஷாபிர் அப்பாஸ் குலாம்ஹுசைன் இயற்கையான காரணங்களால் இறக்கவில்லை, ஆனால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.


    இந்த கொலை தொடர்பாக தொழிலதிபரின் 37 வயது மகனை சிஐடி கைது செய்துள்ளது. உயிரிழந்த தொழிலதிபர் அடம்எக்ஸ்போ லிமிடெட் உட்பட 9 நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார்.


    தொழிலதிபரின் இளைய மகனான சந்தேக நபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செப்ரெம்பர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad