யாஷிகா ஆனந்தின் 'பெஸ்டி' படத்துக்கு கனடா மற்றும் அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்!
நடிகர் அசோக்குமார் மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவான திகில், மர்மம் கலந்த திரைப்படம் பெஸ்டி திரைப்படம் . ஆர். எஸ். சினிமா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரங்கா இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஜே.வி அவர்களின் இசையில் ஆனந்த் இப்படத்தினை ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் நடிகை யாஷிகா விபத்தில் சிக்கினார். இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு விண்ணப்பித்த நிலையில் தற்பொழுது கனடா டொரொண்டோ இன்டர்நேஷனல் தமிழ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் ஆனந்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்துள்ளது.
தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் யாஷிகா ஆனந்திற்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் இந்த படத்தில் நாயகனாக நடித்த நடிகர் அசோக்கிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
மேலும் சிறந்த முறையில் கதை, திரைக்கதை,இயக்கம் என பெஸ்டி படத்தை இயக்கியதற்கான விருதும் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் ஆகிய அனைவருக்கும் புகழையும், பாராட்டையும், விருதினையும் பெற்றுள்ளது.
மேலும் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், சில நாட்களின் முன்னர் நடிகர் அசோக், நடிகை யாஷிகாவை மருத்துவமனையில் சென்று நலம் விசாரித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது.
கருத்துகள் இல்லை