• Breaking News

    மோதலில் தள்ளி விழுத்தப்பட்டு ஒருவர் படுகொலை

     கொஹூவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் கீழே தள்ளி விழுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

    பலபொகுன பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

    சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad