• Breaking News

    நீண்ட நாட்களின் பின் குறைந்தளவு கொவிட் மரணங்கள் பதிவு

     நாட்டில் மேலும் 84 பேர் கொவிட் தொற்றால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,022 ஆக அதிகரித்துள்ளது.

    இதேவேளை, இன்று இதுவரையில், கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,530 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 502,302 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad