• Breaking News

    ஒரு வாரமாக பெற்றோரை தோள் கூடையில் சுமந்து சென்ற ஏழை மகன்! குவியும் பாராட்டுக்கள்

     மியான்மரிலிருந்து பங்காளதேஷ் வரை தனது பெற்றோரே ஒரு வாரமாக தோள் கூடையில் வைத்து சுமந்து சென்ற மகனின் செயல் இணையத்தில் பாராட்டை பெற்று வருகின்றது.

    மியான்மரை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது பெற்றோர் இருவரும் வயதான நிலையில் இருந்துள்ளனர்.

    அவர்களை நடத்தி கூட்டி வர முடியாது என்பதற்காக, தனது தோள் பட்டையில் கம்புகளை வைத்து இருபுறமும் கூடை கட்டி, அதில் தனது வயதான பெற்றோர்கள் இருவரையும் வைத்து சுமந்து வந்துள்ளார்.

    மியான்மரிலிருந்து பங்களாதேஷ் வரை 7 நாட்கள் இவர்கள் இருவரையும் இந்த இளைஞன் சுமந்து வந்துள்ள நிலையில், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த இளைஞனை நவீனகால ஷ்ரவண் குமார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad