மல்லாகத்தில் மிதிவெடி கண்டுபிடிப்பு!
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் - மில் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து மிதிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியின் உரிமையாளர் காணியினை சுத்தம் செய்யும்போது குறித்த வெடிபொருள் அவதானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த மிதிவெடியினை நாளையதினம் மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
.
கருத்துகள் இல்லை