மட்டு. கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!
கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பொதுமக்கள் மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள் என பதினேழு பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மூன்று நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரி.திவாகரன் தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.இன்பராஜாவின் மேற்பார்வையில் இடம்பெற்ற பரிசோதனையில் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை