யாழில், பிறந்து 3 நாட்களேயான குழந்தை உட்பட 25 பேருக்கு கொரோனா உறுதி!
யாழில் பிறந்து 3 நாட்களேயான ஆண் குழந்தை உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரப் பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி பிறந்து 24 நாட்களேயான குழந்தை உட்பட மரணித்த 3 பேர் உள்ளடங்கலாக யாழ். போதனா வைத்தியசாலையில் 15 பேருக்கும், சாவகச்சேரி வைத்தியசாலையில் 4 பேருக்கும், புங்குடுதீவு வைத்தியசாலையில் இரண்டு பேருக்கும், தெல்லிப்பழையில் வைத்தியசாலையில் பிறந்து மூன்று நாட்களேயான குழந்தை உட்பட இரண்டு பேருக்கும், தனியார் வைத்தியசாலையில் இரண்டு பேருக்கும் தொற்று உறுதியானது.
யாழ். போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இவர்கள் 25 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை