தமிழர் பகுதியில் 4 கால்களுடன் வினோத கோழிக்குஞ்சு!
கல்முனைக்குடி - கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் உள்ள கோழிக்குஞ்சு தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது..
வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து குறித்த கோழிக்குஞ்சு வெளிவந்துள்ளது.
நான்கு கால்களை உடைய கோழிக்குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்து 2 நாட்களாகி உள்ளது.
இந்த செய்தி அறிந்து, குறித்த கோழிக் குஞ்சைக் காண அப்பகுதியிலுள்ள அனைவரும் வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை