சமூக சேவையாளர் கந்தப்பிள்ளை திலீபன் அவர்களது 50வது அகவை தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்!
தமிழர் பகுதிகளில் பல்வேறு வாழ்வாதாரங்கள் மற்றும் உதவித் திட்டங்களை செய்து வரும் சமூக சேவையாளர் கந்தப்பிள்ளை திலீபன் அவர்களது ஐம்பதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் இளைஞர்களால் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்றையதினம் (06) நடாத்தப்பட்டது.
இந்த இரத்ததான முகாமில் இளைஞர்கள் பலரும் தாமாக முன்வந்து குருதிக்கொடையினை வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.
லண்டனில் வசித்து வரும் கந்தப்பிள்ளை திலீபன் என்பவர் பல்வேறு உதவித் திட்டங்களை செய்து வந்த நிலையில் அவரை கௌரவிக்கும் முகமாக இந்த இரத்ததான முகாமானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை