யாழில் அதிகாலையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு! மீட்கப்பட்ட கடத்தல் பொருள்
யாழ்.அனலைதீவில் வீடொன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் 20 மஞ்சள் மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பதுக்கி வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவற்குழி மற்றும் அனலைதீவு ஆகிய இடங்களை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட மஞ்சள் மூடைகள் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று சிறிலங்கா கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை