அராலியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு, செட்டியார்மடம் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இமியதாஸ் மொஹமட் இம்ரான் (வயது 33) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை