10ம் தரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கை நாடு முழுவதும் இன்று ஆரம்பம்..
கொவிட் தொற்று காரணமாக பாடசாலை கற்றல் நடவடிக்கை தடைப்பட்டு இருந்த நிலையில் தற்போது கொவிட் தொற்றின் தாக்கம் அண்மை காலங்களாக குறைவடைந்த நிலையில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் 10ம் தரத்திற்க்கு மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கை நாடு முழுவதும் இன்று ஆரம்பமாகிய நிலையில் யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்கள் பாடசாலைக்கு சமூகளித்திருந்தமை அவதானிக்க முடிகின்றது.
யாழ். மாவட்டத்தில் பல இடங்களில் மழையுடனான காலநிலை மத்தியிலும் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைக்கு சமூகமளித்திருந்தமை அவதானிக்க முடிந்தது.
கருத்துகள் இல்லை