வலி. தென்மேற்கு பிரதேச சபையின் பாதீடு பாதீடு 12 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்...
வலி. தென்மேற்கு பிரதேச சபையின் 2022ம் ஆண்டிற்கான பாதீடானது 12 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
வலி. தென்மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்ட கூட்டமானது தவிசாளர் ஜெபநேசன் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் வலிமேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
தவிசாளரால் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது . இதன்போது வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் காரசாரமாக இடம்பெற்றது.
இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தமது கோரிக்கைகள் பாதீட்டில் உள்ளடக்கப்படவில்லை என தெரிவித்து இந்த பாதீட்டை எதிர்த்தனர் .
எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சி , ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் குறித்த பாதீட்டை ஆதரிப்பதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து பாதீடானது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது 12 மேலதிக வாக்குகளால் 2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
28 உறுப்பினர்களை கொண்ட இச்சபையில் உறுப்பினர்கள் கூட்டத்துக்கு சமூகமளிக்காத நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சி , ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளடங்களாக 19 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த பாதீட்டிற்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் 07 உறுப்பினர்கள் வாக்களித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை