யாழில் 17 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு...!
யாழ்ப்பாணம் வடமராட்சி நவிண்டில் பகுதியில் 17 வயதுச் சிறுமி ஒருவர் தீடிரென பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் மிகுந்த ஆழ்த்தியுள்ளது.
வடமராட்சி நவிண்டில் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் வசித்துவந்த குறித்த சிறுமி தீடிரென சுகயீனமுற்று இன்று அவரது வீட்டில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோடிஸ்வரன் வினுசியா வயது 17 என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது உடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை