4,600 அடியில் ஒரு சொர்க்கம் - Tianmen Glass Skywalk
சீனாவின் தியான்மென் மலையிலுள்ள கண்ணாடி ஸ்கைவாக் (Glass Skywalk), பார்ப்பதற்கு வெகு அழகாக இருந்தாலும், பலருக்கு பயத்தையும் தருகிறது. இருப்பினும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகை தருகிறார்கள். சிலிர்ப்பூட்டும் அனுபவத்தைத் தரும் இந்த நடைப்பயணத்தில், சுற்றியுள்ள தியான்மென் மலைகளை ஏறக்குறைய 360-டிகிரியில் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். அதே போல் கீழே உள்ள நீர்வீழ்ச்சியும், பள்ளத்தாக்குகளும் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அள்ளிவழங்குகின்றது.
கடல் மட்டத்திலிருந்து 4,600 அடி உயரத்தில் நிற்கும் இது, ஆசியாவிலேயே மிகவும் தனித்துவமான மலையேற்றத் தளங்களில் ஒன்றாகும். மலையேறுபவர்கள் தங்கள் தலைகள் மேகங்களை தொடுவதை உணருவார்கள். அதே வேளையில், இந்த கண்ணாடி நடைபாதையின் ஒவ்வொரு அடியிலும் கீழே உள்ள நிலம் வெகுதொலைவில் தெளிவாகத் தெரியும். பல்லாயிரம் அடி உயரத்திலிருந்து காலடியில் நிலத்தைப் பார்ப்பது புல்லரிக்கக்கூடிய ஒரு அனுபவம்.
டிராகன் கிளிஃப் ஸ்கைவாக் (The Coiling Dragon Cliff Skywalk)
இந்தப் பாதை 328 அடி தூரம் உள்ளது. இதில் நடக்க சிறப்புத் திறன்கள் அல்லது உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. என்றாலும், அதி உயரத்தில் கண்ணாடிப் பாதையில் நடக்கப்போகும் பார்வையாளர்கள் நடுவில் பயப்பட்டு தடுமாறக்கூடது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த நடைபாதை முற்றிலும் தட்டையானது. மலையிலிருந்து பார்வையாளர்களை பிரிக்கும் ஒரே விஷயம் மலையிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் கண்ணாடிப்பாதை மட்டும்தான்.
இந்த 2.5 அங்குல தடிமன் கொண்ட கண்ணாடியைப் பார்க்கும்போது இது எவ்வாறு பயணிகளை பாதுகாப்பாக தாங்கக்கூடும் என்ற கேள்வி எழலாம். ஆனால், ஆகஸ்ட் 2016 முதல் பொது மக்களுக்களின் பாவ்னைக்காக திறக்கப்பட்டது. இதுவரை எந்தவொரு அசம்பாவிதங்களும் ஏற்படாமல் பார்வையாளர்களைத் தாங்கி நிற்கின்றது.
இந்தப் பாதையின் அகலம் ஐந்தடி மட்டுமே உள்ளது. ஆகவே ஒருவர் இந்தப்பாதையில் செல்லத்தொடங்கிவிட்டால், பின்னே வரும் மற்ற பயணிகளை தாண் திரும்பி வருவதென்பது சாத்தியமற்றது. ஒருமுறை இதில் இறங்கிவிட்டால், மறுமுனையை அடைந்தே ஆகவேண்டும். த்ரில் தேடுபவர்களுக்கு மிகவும் பொருத்தமான மலையேற்றப் பகுதியாக இது இருக்குமென்பதில் சந்தேகமில்லை.
கருத்துகள் இல்லை