இலங்கை பூராகவும் 4 மில்லியன் தெனானங்கன்றுகள் நாட்டும் நிகழ்வு யாழில் நடைபெற்றது
4 மில்லியன் தென்னங்கன்றுகளை பயிரிடும் தேசிய வேலைத்திட்டத்தினை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தினால் தெங்கு பயிர் செய்கையானது இன்று ஆரம்பிக்கப்பட்டது.
4 மில்லியன் தென்னங்கன்றுகளை பயிரிடும் தேசிய வேலைத்திட்டத்தினை முன்னிட்டு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் 12 ஏக்கர் நிலப்பரப்பில் 800 தென்னங்கன்றுகள் நாட்டும் வேலைத்திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் வேலைத்திட்டத்தினை நினைவுகூறும் முகமாக யாழ்ப்பாண பிரதேசத்தை சேர்ந்த 50 பேருக்கு உலர்உணவு பொருட்களும் தென்னங்கன்றுகள் மற்றும் பனம் கன்றுகளும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தினால் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ஏறக்குறைய 7000 தென்னங்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை