• Breaking News

    முதன் முதலாக பொதுவெளியில் தோன்றிய தலிபான் தலைவர்... !



    தலிபான் (Taliban) அமைப்பின் உயர் தலைவரான (Leader) ஹைபத்துல்லா அகுந்த்சாதா (Hibatullah Akhundzada) முதல்முறையாக நேற்று பொது வெளியில் தோன்றியுள்ளார்.

    ஆப்கானிஸ்தானின் (Afghanistan) தென் பகுதியில் அமைந்துள்ள கந்தஹார் (Kandahar) நகரில் நடைபெற்ற கூட்டத்தில் தலிபான் (Taliban)  ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றியுள்ளார்.

    கடந்த ஓகஸ்ட் ( August) மாதம் ஆப்கானிஸ்தானை (Afghanistan)  தலிபான்கள்  (Taliban)  கைப்பற்றிய பின்னர் இதுவரை அவர் பொதுவெளியில் தலைகாட்டாத நிலையில், அவர் இறந்துவிட்டதாகவும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டன.

    இந்நிலையில் நேற்று சனிக்கிழமை (Saturday) இராணுவத்தினர் (Army) மற்றும் ஆதரவாளர்களுடன் பேசுவதற்காக தாருல் உலூம் ஹக்கிமா மதரஸாவுக்கு (Darul Uloom Hakimah Madrassa) சென்றதாக தலிபான் (Taliban) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதன்போது அவரது வருகையை ஒட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், புகைப்படம்,காணொளி என்பனவற்றிற்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad