யாழில் தமிழ் கட்சிகள் முக்கிய கலந்துரையாடல்...
தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றுகூடல் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாண திண்ணையில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்லின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளர் வி.பி.சிவநாதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை