நாட்டை நேசிப்பவர்கள் சேர்ந்து புதிய கட்சியை உருவாக்க வேண்டும்
நாட்டிலுள்ள எந்த ஒரு அரசியல் கட்சியும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லை, நாட்டை நேசிப்பவர்களை ஒன்றிணைத்து புதிய அரசியல் கட்சியை உருவாக்க இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரும தெரிவித்துள்ளார். இது தொடா்பில் மேலும் தெரிவித்த அவர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்காவின் பேச்சுக்களை விரும்பி கேட்கும் மக்கள் அனுரவுக்கு வாக்களிப்பதில்லை, இவ்வாறான நிலையில் நாட்டில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக நாட்டை நேசிப்பவர்களை ஒன்றிணைத்து புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை