சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு!
சுகயீனம் என வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் திடீரென வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தர் சில நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டு குணமடைத்திருந்தார்.
அதன் பின்னர் இன்று (12) சாதாரண சுகயீனம் என வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரத்தில் நோயாளி உயிரிழந்துள்ளார்.
அராலி மேற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தியாகராசா ஜெயரஞ்சன் (வயது 32) என்ற முன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரமோகன் மேற்கெள்ளவுள்ளார்.
கருத்துகள் இல்லை