ஈழத்து எம்.ஜி.ஆருக்கு இதய அஞ்சலிகள்...
இன்றைய தினம் காலமான ஈழத்து எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் அவர்களுடைய இறுதி அஞ்சலி நிகழ்வு கோப்பாயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
ஈழத்து எம்.ஜி.ஆரின் பூதவுடலுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் சமூக பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதன்பின் இடம்பெற்ற அஞ்சலி உரைகளைத் தொடர்ந்து ஈழத்து எம்ஜிஆரின் பூதவுடல் தகனக்கிரிகைகளுக்காக கோப்பாய் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கருத்துகள் இல்லை