கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால்?
இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் கொரோனா முதல் அலையின் போது, தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அண்மையில் தனது முதலாம் ஆண்டு திருமண நாள் குறித்து சமூக வலைதளத்தில் காஜல் அகர்வால் ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார்.
இவர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
கருத்துகள் இல்லை