• Breaking News

    நேற்றிரவு காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக கட்டைக்காட்டில் பல குடும்பங்கள் பாதிப்பு...!

     


    நேற்றிரவு காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானில் சில குடும்பங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

    தொடர்ச்சியாக பெய்த அடைமழையால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

    இந்நிலையில் கைக் குழந்தைகளுடன் வசித்து வரும் சில  குடும்பங்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

    வெள்ளம் தொடர்பாக உரிய தரப்பினர்களுக்கு அறிவித்திருந்தும் அவர்கள் இதுவரையில் வருகை தந்து நிலைமையை ஆராயவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

    எனவே உதவி செய்வதற்கு விரும்பும் நல்லுள்ளங்களை தமக்கு உதவ முன்வருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad