வீசிய காற்றினால் பனை முறிந்து விழுந்து மின்சார வயர் துண்டிப்பு...!
இன்று மதியம் வீசிய காற்றினால் அராலி மத்தி பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்த பனைமரம் முறிந்து மின்சார வயரின் மீது விழுந்துள்ளது. இதனால் மின்சார வயர் அறுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இலங்கை மின்சார சபையின் வட்டுக்கோட்டை அலுவலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு வருகைதந்த மின்சார சபையினர் மின்னிணைப்பினை சரிசெய்துவிட்டு சென்றனர்.
எனினும் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
கருத்துகள் இல்லை